search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானத்தில் கோளாறு"

    மும்பையில் இருந்து அகமதாபாத், லண்டன் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு காரணமாக அகமதாபாத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #AirIndiaflight #technicalsnag
    அகமதாபாத்:

    மும்பையில் இருந்து அகமதாபாத், லண்டன் வழியாக அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் நகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் சுமார் 130 பயணிகளுடன் இன்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

    வழியில் அதிகாலை 4.50 மணியளவில்அகமதாபாத் நகரில் தரையிறங்கியபோது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் அந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கோளாறு சீர்படுத்தப்பட்ட பின்னர் நாளை காலை 6.35 மணியளவில் அந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பயணிகள் தங்களது இல்லங்களுக்கு திரும்பி விட்டதாகவும், 110 பயணிகள் அகமதாபாத் நகரில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் இன்று மாலை தெரிவித்தனர். #AirIndiaflight #technicalsnag
    இந்திய விமானப்படையின் விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து பைலட் வெளியே குதித்து உயிர்தப்பினார்.
    ஜாம்நகர்:

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தில் இருந்து ஜாகுவார் போர் விமானம் இன்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. விமானத்தை இயக்கிய பைலட்,  காலை 9.20 மணியளவில் குறிப்பிட்ட ஓடுபாதையில் தரையிறக்க தயாரானார்.

    அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை உணர்ந்த பைலட், அவசரம் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். அதேசமயம் விமானம் ஓடுபாதையில் நிற்பதற்குள், வெளியே குதித்து உயிர்தப்பினார். விமானம் மட்டும் சிறிய அளவில் சேதமடைந்தது.



    இது சிறிய அளவிலான விபத்துதான் என்றும், சரியான சமயத்தில் பைலட் பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மூன்று தினங்களுக்கு முன் கட்ச் பகுதியில் ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில்  விமானப்படை பைலட் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #IAFJaguarCrashed

    விஜயகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ThoothukudiShooting #VijayakanthFlight
    மதுரை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவியும் கட்சியின் மகளிரணி தலைவியுமான பிரேமலதா ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்னை புறப்பட்டனர். அந்த விமானத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 65 பேர் பயணம் செய்தனர்.

    ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் மதுரையை நெருங்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டறிந்த விமானி, மதுரை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக  தரையிறக்குவதற்கு அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், மதுரையில் விமானம் தரையிறக்கப்பட்டது. 

    விமானத்தில் பயணித்த விஜயகாந்த், பிரேமலதா, சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    முன்னதாக, துப்பாக்கி சூட்டினால் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #ThoothukudiShooting #VijayakanthFlight
    ×